10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பட்டினி போராட்டம்

பைல் படம்
நாமக்கல்,
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பிõன ஜாக்டோ-ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற பட்டினி போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர், முருகன், அருள்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சசிகலா போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 2003, ஏப்ரல் 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில், 30 சதவீதத்திற்கு அதிகமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இடைநிலை ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பின், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu