ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் பொருட்களைப் பெறலாம்: நாமக்கல் கலெக்டர்

ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் பொருட்களைப் பெறலாம்: நாமக்கல் கலெக்டர்
X

பைல் படம்.

தீபாவளி பண்டிக்கைக்காக நவ.1 முதல்ம் 3ம் தேதி வரை ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை பொருட்களைப் பெறலாம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வருகிற நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,48,051 ரேசன் கார்டுகள் உள்ளன. ரேசன் கார்டுதாரர்கள் அனைத்து ரேசன் கடைகளிலும், வருகிற நவ.1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் 3ம் தேதிக்குள் பொருட்களை பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள் வழக்கம் போல, பண்டிகை விடுமுறை முடிந்த பிறகு 8ம் தேதி திங்கட்கிழமை முதல் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ரேசன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் மட்டும், கொரோனா கட்டுப்பாடுகளை அனுசரித்து பொருள் வாங்க செல்ல வேண்டும். நவ.1 முதல் 3ஆம் தேதி வரை அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், கட்டுப்பாட்டு அறை எண். 04286-281116-க்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!