குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயசிங்.

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளைஞர் நீதி சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு 2015, இளைஞர் நீதி திருத்தப்பட்ட சட்டம் 2021 மற்றும் விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி குழந்தைகள் உளவியல், மனநலம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித வளம், கல்வி, மனிதவளமேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி மற்றும் குழந்தைகள் நலன் ஆகியவை சார்ந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் 7 வருட பணி அனுபவம் அல்லது பட்டம் பெற்று தொழில் முறையாக வேலை செய்து வருபவராக வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்மாக ஒரு நபர் 2 முறை மட் டுமே பதவி வகிக்க தகுதி உடையவர் ஆவார். ஆனால் தொடர்ந்து 2 முறை பதவி வகிக்க இயலாது. விருப்பமுள்ளவர்கள் தலைவர், உறுப்பினர் பதவிக்கான விண்ணப்படிவத்தை மாவட்ட குழதைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 15 நாட்களுக்குள் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!