ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்

பைல் படம்.
Goat Vaccination Chart -ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை மருத் துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலைகளில் கோழிகளை நச்சு உயிரி மற்றும் நுண்ணுயிரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள கால்நடை டாக்டர்களின் ஆலோசனைபடி தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
பருவமழை காலங்களில் மழைநீர் கொட்டகை யினுள் புகுவதால், கோழி எருவில் ஈக்களின் புழுக்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் உள்ள எருவை அவ்வப்போது அகற்ற வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில் புழுக்களை கொல்லும் மருந்தை கோழி எருவின் மேல் தெளிக்க வேண்டும் அல்லது கோழித்தீவனங்களில் கலந்து விட வேண்டும். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் துள்ளுமாரி நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்நடை டாக்டரை அணுகி ஆடுகளுக்கு துள்ளுமாறி நோய் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu