சேந்தமங்கலம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பில் ரோடு அமைக்கும் பணி : கலெக்டர் ஆய்வு
பட விளக்கம் : சேந்தமங்கலம் ஒன்றியத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை, ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் ஒன்றியத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை, ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பில் ரோடு அமைக்கும் பணி : ஆட்சியர் ஆய்வு
நாமக்கல்,
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ரூ. 1.20 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ரோடு அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்து செய்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி, பெரியகுளம் பஞ்சாயத்துகளில் தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்டஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தார்சாலைகளின் தரம் குறித்தும், விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவுகளின் படி சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் பரிசோதனை செய்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பொம்மசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு, நோயாளிகள் மற்றும் டாக்டர்களின் மருத்துவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலனை காத்திடும் வகையில் சிறப்பாக பணியாற வேண்டும் என மருத்துவ பணியாளர்களை அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, கொண்டமநாயக்கன்பட்டியில் தறி மூலம் ஆடை நெசவு செய்து வருவதை பார்வையிட்டு, நெசவு செய்ய பயன்படுத்தப்படும் கருவிகள், பயன்படுத்தப்படும் நூலின் தரம், தயாரிக்கப்பட்டுள்ள ஆடையின் தரம் உள்ளிட்டவற்றைஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu