பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் சந்தையில் ரூ.1.50 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் சந்தையில் ரூ.1.50 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை
X

நாமக்கல்லில் நடைபெற்ற வாரச் சந்தையில், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

நாமக்கல் மாநகராட்சி ஆபீஸ் அருகில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படும். இதன் ஒரு பகுதியில் ஆட்டுச்சந்தை நடைபெறும். வாரம் தோறும் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நாமக்கல் வாரச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி லாரிகளில் ஏற்றிச் செல்வர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிககையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு ஏராளமான வெள்ளாடு, செம்மறியாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆடுகளின் எடைக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டுக்குட்டிகள் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டன.

இதன்படி ஒரே நாளில் ரூ.1.50 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தவர்கள் கூறுகையில், சந்தைக்கு மொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவை மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பில் விற்பனையாகியது. இது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது. ஆடுகள் விலை அதிகமானதும், வியாபாரிகள் குறைவாக வந்ததுமே இதற்கு காரணம். கடந்த ஆண்டு பொங்கலின்போது, நாமக்கல் ஆட்டு சந்தையில் ரூ.2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையாகின என்றனர்.

Next Story