நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் 2 ஏ.டி.எம்., மையம் விரைவில் துவக்கப்படும்: கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் 2 ஏ.டி.எம்., மையம் விரைவில் துவக்கப்படும்: கண்காணிப்பு அலுவலர்
X

நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏடிஎம் மையங்கள் துவக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏடிஎம் மையங்கள் துவக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

நாமக்கல் மாநகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்டு முதலைப்பட்டி அருகில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டும் என பஸ் பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான ஆசியா மரியம், கலெக்டர் உமாவுடன் நேரில் சென்று புதிய ஸ்டாண்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தும் இடம், கடைகள், ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு பகுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, டிரைவர்கள் ஓய்வு அறை, நேரம் காப்பாளர் அறை, பொருள் வைப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளில் உணவுப் பொருட்களை தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், துணிப்பைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சிரமமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் இயக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பஸ் ஸ்டாண்டில், 2 புதிய ஏ.டி.எம்., மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறினார். மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன், ஆர்.டி.ஓ. முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story
விரதத்துடன் தலைவலியும் வந்தால் என்ன செய்யலாம்? தீர்வுகள் இதோ!