நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை அறிக்கையில் தகவல்

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல், 6ம் தேதி வரை 4 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 3ம் தேதி முதல் 6ம் தேதி தேதி வரை 4 நாட்கள் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 34 முதல் 37 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 21 டிகிரி முதல் 24 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். வானம் மோகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து மணிக்கு 6 முதல் 12 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை ஏப். 3ம் தேதி 5 மி.மீ., 4ம் தேதி 7 மி.மீ., 5ம் தேதி 23 மி.மீ., 6ம் தேதி 27 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
கோழிப்பண்ணையாளர்களுக்கு: கோடை காலம் துவங்கியுள்ளதால், கோழிகளுக்கு அதிக வெப்பமில்லாமல் குளிர்ந்த குடிநீரைக் கொடுக்க வேண்டும். கோழித்தீவனத்தில் சோயா எண்எணய்யை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்கு வெப்ப அயற்சியை குறைக்கலாம். கோழித்தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர் சத்துக்கள் சேர்ப்பதன் மூலம் உற்பத்தி குறைவினை தவிர்க்கலாம். கோழிப்பண்பண்ணைகளில் இரவு நேரத்தில் 1 மணி நேரம் (இரவு 12 முதல் 1 மணிவரை) கூடுதலாக மின் விளக்குகளை எரியவிடுவதன் மூலம் கோழிகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் பண்ணைகளில் தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்குதலை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu