நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 7ம் தேதி மொத்தம் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அவர்கள் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,082 பேர், மாவட்டத்தில் இன்று 716 பேர் சிகிச்சை குனமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 63,676 பேர்.

தற்போது மொத்தம் 2,876 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!