முள்ளுக்குறிச்சியில் 19ம் தேதி வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம்

பைல் படம்.
முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10 ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சிறப்பு பதிவு முகாம், வருகிற 19ம் தேதி, காலை 9 மணிக்கு ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பு மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். மேலும், https://bit.ly/VettriNichayamskillஎன்ற வெப்சைட்டில் உள்ள லிங்க்கைப் பயன்படுத்தி தங்களின் முன் பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும், வருகிற 19ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் முன்பதிவு முகாமில் சான்றிதழ்களை நேரில் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளவேண்டும். உங்கள் வெற்றி எங்களின் நோக்கம் என்ற தலைப்பில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு, கலெக்டர் ஆபீஸ் வளாத்தில் உள்ள, பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu