நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் இன்று காலை வரை விட்டு விட்டு தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம்: நாமக்கல் நகரம் 16.5 மி.மீ., நாமக்கல் கலெக்டர் அலுவலகம் 3.5 மி.மீ, எருமப்பட்டி 23 மி.மீ, குமாரபாளையம் 18.6 மி.மீ, மங்களபுரம் 14 மி.மீ, மோகனூர் 30 மி.மீ, பரமத்தி வேலூர் 20 மி.மீ, புதுச்சத்திரம் 20 மி.மீ, ராசிபுரம் 21.3 மி.மீ, சேந்தமங்கலம் 34 மி.மீ, திருச்செங்கோடு 17மி.மீ, கொல்லிமலை செம்மேடு 43 மி.மீ பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 260.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!