நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை கலை விழா

X
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், வரலாற்றுத்துறை மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
By - P.Nathan, Reporter |25 April 2022 7:45 AM IST
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கலைவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாரதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் மினி வரவேற்றார். வரலாற்று துறை தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவிகள் கிராமிய, தேசபக்தி பாடல்களுக்கு நடனமாடினர். மாணவிகள் கொடிகாத்த குமரனின் நாடகத்தை அரங்கேற்றினர். கல்லூரி பேராசிரியர்கள்மற்றும் திரளான மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu