நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: மொத்தம் 441.8 மி.மீ., மழையளவு பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: மொத்தம் 441.8 மி.மீ., மழையளவு பதிவு
X
மழை (பைல் படம்).
நாமக்கல் மாவட்டத்தில் விடிவிடிய கனமழை பெய்தது. ஒரே நாளில் மொத்தம் 441.8 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. ஒரே நாளில் மொத்தம் 441.8 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெய்யில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசியது. சனிக்கிழமை காலை முதல் மாலை வரை விட்டு விட்டு லேசான மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குளிரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினார்கள். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை கனமழை பெய்தது. இதனால் நாமக்கல் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்ததால், குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம்:

நாமக்கல் நகரம் 30 மி.மீ., கலெக்டர் ஆபீஸ் 24 மி.மீ., எருமப்பட்டி 30 மி.மீ., குமாரபாளையம் 4 மி.மீ., மங்களபுரம் 61.8 மி.மீ., மோகனூர் 15 மி.மீ., ப.வேலூர் 11 மி.மீ., புதுச்சத்திரம் 45 மி.மீ., ராசிபுரம் 65 மி.மீ., சேந்தமங்கலம் 46 மி.மீ., திருச்செங்கோடு 15 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 80 மி.மீ., மாவட்டத்தில் மொத்தம் 441.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. கொல்லிமலையில் அதிகபட்சமாக 80 மி.மீ, குமாரபாளையத்தில் குறைந்தபட்சமாக 4 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.

Next Story
why is ai important to the future