லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற ஹெல்த் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற ஹெல்த் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஹெல்த் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, வடகரையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (28). இவர், கொல்லிமலையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணியை முடித்துக் கொண்டு, தனது மோட்டார் பைக்கிள் அவர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-கரூர் பைபாஸ் ரோட்டில், வள்ளிபுரம் நல்லாயி கோயில் அருகே அவர் சென்றபோது அவ்வழியாக சென்ற லாரி திடீரென்று பிரேக் போட்டு நின்றதால், லாரியும் பைக்கும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா