நாமக்கல்லில் நாளை சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை சமையல் கேஸ்   நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்.

நாமக்கல்லில் நாளை சமையல் கேஸ் நுகர்வேர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி அனைத்து எண்ணெய், கேஸ் கம்பெனி நிறுவன ஏஜெண்டுகள், கேஸ் விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நாளை 20ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பெதுமக்கள் மற்றும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்