வீசானம் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

வீசானம் கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

வீசானம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் பஞ்சாயத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் பஞ்சாயத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, கோவிட் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் முகாம், 75-வது சுதந்திர திருநாளையொட்டி, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா, நீர் வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் உள்ளிட்டேர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!