நாமக்கல் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை

நாமக்கல் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை    முன்னிட்டு ரூ.2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை
X

நாமக்கல் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகள்.

நாமக்கல் வாரச்சந்தையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் வாரச்சந்தையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளை மார்ச் 31ம் தேதி, இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. நேற்று ரம்ஜானை முன்னிட்டு, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. சந்தையில், அதிகாலை 5 முதல் மாலை 3 மணிவரை ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாமக்கல் ஆட்டு சந்தைக்கு, நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், எருமப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், தரமாகவும், ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், ஏராளமான வியாபாரிகள் நாமக்கல் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

ஆடுகள் எடைக்குத் தகுந்தபடி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு ஆடு ரூ. 4,000 முதல், அதிக பட்சம் ரூ. 17,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஆட்டுக் குட்டி ரூ. 400 முதல், ரூ. 1,500 வரை விற்பனையானது. பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டி ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில், ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story