கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக், பேச்சுவார்த்தை தோல்வி : ஸ்டிரைக் தொடரும் என அறிவிப்பு

பைல் படம்
நாமக்கல்,
எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் சம்மந்தமாக கோவையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஸ்டிரைக் தொடரும் என கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள, கேஸ் டேங்கர் லாரிகளுக்கான டெண்டரில் குறிப்பிட்டுள்ள, சில கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி இன்று 27ம் தேதி காலை 6 மணி முதல் தென்னிந்தியா முழுவதும் கேஸ் டேங்கர் லாரிகளை ஓட்டாமல் நிறுத்தி ஸ்டிரைக் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால், தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 5 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் ஓட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் நீடித்தால் வீடுகளுக்கு தேவையான சமையல் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையொட்டி மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளுக்கும், தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளக்கும் இடையே, கோவை தனியார் ஹோட்டலில் இன்று மாலை 4 மணி துவங்கி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கேஸ் டேங்கர் உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கைகளை, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என தென் மண்டல எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu