கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்: இன்றுபுதிய நிர்வாகிகள் தேர்தல்

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்: இன்றுபுதிய நிர்வாகிகள் தேர்தல்
X

பைல் படம்.

நாமக்கல்லில் இன்று தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 2,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான சுமார் 5,000 புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. இந்த சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். 2022--2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் சங்க தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 1,245 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ் டிரான்ஸ்போர்ட் சுந்தர்ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், பிசிஎஸ் டிரான்ஸ்போர்ட் சந்திரசேகரன் தலைமையில், மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். கடந்த 15 நாட்களாக இரண்டு அணியினரும், தங்களுடைய ஆதரவாளர்களுடன், உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்து வந்தனர். இன்று மாலை 5 மணிக்கு, வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், 6 முக்கிய நிர்வாகிளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும், செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் நாளை 29ம் தேதி காலை எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself