நாமக்கல்லில் கேஸ் கசிந்து தீ விபத்து: கார் எரிந்து சேதம்

நாமக்கல்லில் கேஸ் கசிந்து தீ விபத்து: கார் எரிந்து சேதம்
X

பைல் படம்.

நாமக்கல் நகரில் டேங்கில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

நாமக்கல், மோகனூர் ரோடு, பிவிஆர் ரோட்டில் வசிப்பவர், செங்கோட்டுவேலு(61), விவசாயி. சம்பவத்தன்று காலை அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்தார். அப்போது காரின் டேங்கில் இருந்து கேஸ் கசிந்து தீப்பிடித்து கரும்புகை உருவனாது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். காரின் உள்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
video editing ai tool