நாமக்கல் நகரில் கத்தியுடன் காரில் சுற்றித் திரிந்த 4 பேர் கும்பல் கைது

நாமக்கல் நகரில் கத்தியுடன் காரில்    சுற்றித் திரிந்த 4 பேர் கும்பல் கைது
X

நாமக்கல் நகரில் காரில் கத்தியுடன் சுற்றித்திரிந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட அஜய் பிரபாகர், லேகேஷ்வரன், குணசேகரன், கிருபாகரன் ஆகியோர்.

நாமக்கல் நகரில் கத்தியுடன் காரில் சுற்றித்திரிந்த 4 பேர் கொண்டு கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் நகரில் கத்தியுடன் காரில் சுற்றித்திரிந்த 4 பேர் கொண்டு கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் டவுன் போலீஸ் எஸ்.ஜ சாந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே வந்த ஒரு காரில் இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக அந்த காரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 2 கத்திகள் இருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காலனி பகுதியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), மாரி கங்காணி தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (32), என்.கொசவம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (48), வெள்ளவாரி தெருவை சேர்ந்த கிருபாகரன் (32) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குணசேகரன் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி யிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும். இதற்கு காரணம் அவரது உறவினர்கள் தான் என்றும், அவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காரில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story