நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா
X

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது

நாமக்கல், அண்ணா அரசு கலைக் கல்லூரியில், காந்தி பிறந்த நாள் விழா, கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இயற்பியல் துறை பேராசிரியர் பங்காரு முன்னிலை வகித்தார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி வரவேற்றார். பொருளியல் துறை பேராசிரியர் சக்திவேல் காந்தியின் கருத்துக்கள் குறித்து பேசினார்.

விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் முதல் பரிசு மோகன், இரண்டாம் பரிசு குணவதி, மூன்றாம் பரிசு அனிதா ஆகியோர் பெற்றனர். ஸ்லோகன் போட்டியில் முதல் பரிசு திவ்யா, இரண்டாம் பரிசு ஜீவானந்தம் ஆகியோர் பெற்றனர். ஓவியப் போட்டியில் கோபாலகிருஷ்ணன் முதல் பரிசும், சுரேந்திரன் இரண்டாம் பரிசும் பெற்றனர். திரளான பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்