மனைவி இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி: கூலித் தொழிலாளி தற்கொலை

மனைவி இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி: கூலித் தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி ரோஜா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27), கூலித்தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாலினி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் விரக்தி அடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.

இது குறித்து, மோகனூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!