ராசிபுரம் அருகே அரசு டவுன் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம்: 7 அலுவலர்கள் சஸ்பெண்ட்

ராசிபுரம் தாலுகா முத்துக்காளிப்பட்டி அருகே அரசு டவுன் பஸ்சின் முன்சக்கரம் கழன்று ஓடியாதல், அதை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நாமக்கல்
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு 52 என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயணம் செய்கின்றனர். நேற்று காலை ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்திற்கு எண் 52 டவுன் பஸ் 20 பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர் பாலசுந்தரம் பஸ்சை ஓட்டிச் சென்றார். அந்த பஸ் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி, வைரமலை ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது பஸ்சின் முன் பக்க சக்கரம் திடீரென தனியாக கழன்று, பஸ்சின் முன்புறம் உருண்டோடி அருகில் இருந்து ஓடையில் விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த, பஸ்சில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் போட்டனர். பஸ் டிரைவர் பாலசுந்தரம், நிலைமையை சமாளித்து, பஸ்சை ரேட்டின் ஓரமாக நிறுத்தினார். இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி மாற்று பஸ்சில் சென்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி மீடக்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழ நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து, சேலம் அரசுப்போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் கூறியுள்ளதாவது:
ராசிபுரம் அருகே டயர் கழன்று ஓடிய அரசு டவுன் பஸ்சின் முன்சக்கரம் கடந்த 6ம் தேதியன்று சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்து நடைபெற்ற வாராந்திர பராமரிப்பு பணியின்போது சக்கரத்தில் அசைவு உள்ளதா என்பதை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் முறையக பரிசோதித்திருந்தால், இச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். எனவே முறையாக பஸ் பரமாமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத தொழில்நுட்ப பணியாளர்கள் 4 பேர், மேற்பார்வையாளர்கள் 2 பேர் மற்றும் ஒர்க்ஷாப் கிளை மேலாளர் உட்பட 7 பேர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu