நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து  தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X
நாமக்கல் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

நாமக்கல் அருகே மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் மருதவேல் (வயது50). நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். மருதவேலுக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ், சங்கர் என்ற மகன்களும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மருதவேல் பணி நேரம் போக, மீதி நேரத்தில், அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பகுதி நேர கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 8-ம்தேதி அணியாபுரத்தில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டிற்கு மேல்தளத்தில் இருந்து சுவற்றுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மருதவேலுவை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities