வரும் 18ம் தேதி நெற் பயிரில் ஊட்டச்சத்து மேலாண்மை இலவச பயிற்சி முகாம்
பைல் படம்.
நாமக்கல்லில் வரும் 18ம் தேதி, நெற் பயிரில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய (கேவிகே) தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 18 ம்தேதி, காலை 10 மணிக்கு, நெல் பயிரில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில், பசுந்தாள் உரமிடல், நெல்பயிரில் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல், மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கிகயத்தும், மண் மற்றும் நீர் மாதிரி சேகரிக்கும் முறைகள், விளைச்சலை அதிகரிக்க இயற்கை எருக்கள், உயிர் உரங்கள் மற்றும் மண்வள அட்டை அடிப்படையில் ரசாயன உரங்கள் மற்றும் அங்கக முறையில் நெல்பயிருக்கு ஊட்டமளிக்கும் முறை குறித்து விளக்கப்படுகிறது.
பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu