வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள்: எம்எல்ஏ வழங்கல்

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள்: எம்எல்ஏ வழங்கல்
X

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் நாமக்கல்லில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை எம்எல்ஏ வழங்கினார்.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்துள்ளார்.

இதையொட்டி நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு தேக்கு, பெருநெல்லி, மகாகனி, புளி, நாவல், அசோக மரம், கடுக்காய், குமிழ், ஈட்டி ஆகிய மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார். நாமக்கல் ஒன்றிய அட்மா தலைவர் பழனிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, கண்ணன், நலங்கிளி, சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குனர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி, வேளாண் அலுவலர் சித்ரா, துணை தோட்டக்கலை அலுவலர் செல்வமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா