எர்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்: எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்

எர்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்: எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்
X

எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், ஊட்டச்சத்து காய்கறிகள் கண்காட்சியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்துப் பார்வையிட்ட போது எடுத்த படம்.

எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்

எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் எர்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பற்றியில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து காய்கறி கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மாலதி மற்றும் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டு, சுமார் 1,022 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கினார்கள்.

நாமக்கல் அட்மா தலைவர் பழனிவேல், மருத்துவ அலுவலர் சிவதர்சிணி, சித்த மருத்து அலுவலர் பூபதிராஜா, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வளார்கள் ராஜகணபதி, அப்துல் ரஜீன், பிடிஓ பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் மாரப்பன், நலங்கிள்ளி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Next Story
future of ai act