எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு தாட்கோ மூலம் இலவச ஆங்கிலத் தேர்வு பயிற்சி

பைல் படம்
நாமக்கல்,
தாட்கோ மூலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மருத்துவம் சார்ந்த துறையில் ஆங்கில தேர்வுக்கான இலவச பயிறசிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவத்துறை சார்ந்த ஆங்கில தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். பயிற்சிக்கு பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது நர்சிங் மருத்துவப் படிப்பு ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். பயிற்சி கால அளவு 2 மாதமும் ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ வெப்சைட் தாட்கோ.காம் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu