நாமக்கல்லில் போலீஸ் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

நாமக்கல்லில் போலீஸ் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

Free Coaching Classes - நாமக்கல்லில் போலீஸ் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Free Coaching Classes -போலீஸ் போட்டித் தேர்வுக்கு நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 3,552 பணிக்காலியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான இந்த தேர்வுக்கு ஆக. 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சீருடைப்பணியாளர் போட்டித்தேர்வில், நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடைபெற்ற இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்பில் படித்த 24 மாணவர்கள் தேர்வாகி பணி நியமனம் பெற்று தற்போது பயிற்சியில் உள்ளனர். சீருடைப்பணியாளர் எழுத்துத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடத்தப்படவுள்ளது. இலவச நேரடி பயிற்சி வகுப்பு இன்று 26ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, ஆன்லைன்கிளாஸ்என்கேஎல்அட்ஜிமெயில்.காம் என் இமெயில் மூலமோ அல்லது வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்புகொண்டு பதிவு செய்து வகுப்பில் கலந்துகொள்ளலாம் எனஅதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மேக்-அப் போடலைன்னாலும் முகம் அழகா இருக்கணும்னு நினைக்கிறீங்களா ?.. இந்த சில விஷயங்கள மட்டும் கண்டிப்பா மறக்காம பண்ணுங்க ..!