முன்னாள் முதல்வர் சுப்பராயன் நினைவு மண்டபம் கட்டுமானப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

முன்னாள் முதல்வர் சுப்பராயன் நினைவு மண்டபம்    கட்டுமானப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
X

புதுச்சத்திரம் அருகே தோட்டக்கூர்ப்பட்டியில் நடைபெற்று வரும், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் நினைவு மண்டப கட்டுமானப்பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சத்திரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பில் கட்டப்படும், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் நினைவு மண்டபம் கட்டுமானப்பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

புதுச்சத்திரம் அருகே ரூ. 2.50 கோடி மதிப்பில் கட்டப்படும், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் நினைவு மண்டபம் கட்டுமானப்பணிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி பஞ்சாயத்தில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர், டாக்டர் ப.சுப்பராயன் நினைவு அரங்கம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்த கடந்த 2023ம் ஆண்டு கட்டுமானப்பணிகளை அவர் துவக்கி வைத்தார். தற்போது கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாமக்கல் கலெக்டர் உமா அந்த நினைவு அரங்க கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நவனி பஞ்சாயத்தில் தாட்கோ மூலம் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல சமுதாயக்கூடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5.95 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ69.83 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், மருந்தக இருப்பறை, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story