முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள்: மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள்: மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
X

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

Bicycle Race -அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Bicycle Race -நாமக்கல் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை மு ன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி துவக்க விழா கலெக்டர் அலுவலகம் முன்புறம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த சைக்கிள் போட்டிகள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., தொலைவு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வேலகவுண்டம்பட்டி வரை நடைபெற்றது. 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மாணிக்கம்பாளையம் வரை நடைபெற்றது.

17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மாணிக்கம்பாளையம் வரை நடைபெற்றது. முதல் பரிசு - ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2000- மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250 மற்றும் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, விளையாட்டு பயிற்சியாள்கள் கோகிலா, புவனேஸ்வரி, பிரபுகுமார், சீனிவாசன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story