10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பணிக்கு, அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு

10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பணிக்கு,  அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்காக, 92 தேர்வு மையங்களுக்கு, 1,698 அறை கண்காணிப்பாளர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்காக, 92 தேர்வு மையங்களுக்கு, 1,698 அறை கண்காணிப்பாளர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் 28 ல் தொடங்கி, ஏப்ரல் 15ஆம் முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 10,005 மாணவர்கள், 9,033 மாணவியர், 304 தனித்தேர்வர்கள் என, மொத்தம், 19,342 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 92 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில், 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள், 6 பேர் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள், 1,698 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதைக் கண்காணிக்க, தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கற்பகம் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள 92 தேர்வு மையங்களுக்கு, 1,698 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, தலைமையாசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story
ai in healthcare marketing