நாமக்கல்லில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்.

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 29ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான, ஏப்ரல் மாத குறைதீர் கூட்டம் வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கூட்டத்தில் கலந்துகொண்டு, கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!