பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
X

பைல் படம்

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் நெல்- 2 (சம்பா) மற்றும் சிறிய வெங்கயாம்- 2 பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம். இதற்கான, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்- 2 (சம்பா) பயிருக்கு ரூ.337.1ஐ டிச. 15க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலைபயிர்களான சிறிய வெங்காயம்- 2 பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82ஐ நவ. 30க்குள் செலுத்த வேண்டும்.

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் இன்சூரன்ஸ் செய்து கொள்ளாம் அல்லது விலக்கு அளிக்ககோரலாம். கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் விஏஓவின் அடங்கல் சான்று, வங்கி கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் நம்பர் இணைத்து, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india