கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
X

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் முகாமில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

Grievance Committee -நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Grievance Committee - நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதவாது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 384.47 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜுலை மாதம் முடிய இயல்பு மழையளவை விட 160.70 மி.மீ.அதிகமாக மழை அளவு பெறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஜுன் மாதம் வரை நெல் 7 எக்டர், சிறுதானியங்கள் 10,717 எக்டர், பயறு வகைகள் 3,327 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 16,427 எக்டர், பருத்தி 1,317 எக்டர் மற்றும் கரும்பு 757 எக்டர் என மொத்தம் 32,552 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 132 எக்டர், கத்திரி 90 எக்டர், வெண்டை 63 எக்டர், மிளகாய் 37 எக்டர், மரவள்ளி 48 எக்டர், வெங்காயம் 471 எக்டர், மஞ்சள் 454 எக்டர் மற்றும் வாழை 47 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விபரம்:

பாலசுப்ரமணியன் (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் மையப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அதேபோல், வாய்க்கால் பகுதிகளிலும் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தால், ஆற்றை சுத்தப்படுத்தவும், பஞ்சாயத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்.

ஸ்ரேயா சிங் (கலெக்டர்): மாவட்டத்தில், 3 ஏரிகளில், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் உள்ளவற்றை அகற்ற முடியாது. அவர்கள் கேட்டுக் கொண்டால், அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும்போது ஆற்றுக்குள் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலசுப்ரமணியன் (பொதுச்செயலாளர், விவசாய முன்னேற்ற கழகம்): கரும்புக்கு விலை குறைவாக உள்ளதால், உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தற்போது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 விலை வழங்குகிறது. இது, சாகுபடி செலவு, வெட்டுக்கூலி போன்வற்றிற்கே சரியாகப் போகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில், டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. எனவே, தற்பாதுள்ள நிலையில், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,000 விலை வழங்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

பூபாலன் (விவசாய சங்க நிர்வாகி): கொல்லிமலை பகுதியில் நிலம் சர்வே செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

கலெக்டர்: கொல்லிமலையில், மறு அளவீடு பணி, ஒரு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!