வேளாண்ட் பட்ஜெட் அறிவிப்புகளை சட்டமாக வெளியிட விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

வேளாண்ட் பட்ஜெட் அறிவிப்புகளை சட்டமாக    வெளியிட விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
X

வேலுசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்.

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவித்த திட்டங்களை, உடனடியாக சட்டமாக அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என, முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாமக்கல்,

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், நாமக்கல் வேலுசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தி.மு.க அரசு தமிழக விவசாயிகளுக்கு 2021-ல் சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிட் கூட்டத் தொடரில், உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, நடப்பாண்டு கரும்பு அரவை பருவத்திற்கு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும். மேலும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாக இல்லை என்றாலும், விவசாயிகளின் நலன்கருதி, தற்போது உழவர் நலத்துறை மூலம் அறிவித்த அறிவிப்புகளை உடனடியாக, கெஜட்டில் அரசு உத்தரவாக வெளியிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story