தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி 31ம் தேதி வரை கால நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி 31ம் தேதி வரை கால நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு
X

தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு வரும் 31ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் கமிஷன், ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, எனது ஓட்டு எனது எதிர்காலம்; ஒரு ஓட்டின் வலிமை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஆன்லைன் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை நடத்துகிறது. வினாடி – வினா, வாசகம் எழுதுதல், பாட்டு, வீடியோக காட்சி உருவாக்கல் மற்றும் போஸ்டர் வடிவமைப்புப் போட்டி என 5 பிரிவுகளில் இப்போட்டி நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள், போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதன் விபரங்களை வோட்டர்-கன்ட்டெஸ்ட்அட்இசிஐ.ஜிஓவி.இன் என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விபரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க, கடந்த 15ம் தேதி இறுதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, வரும் 31ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக், தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ-, மாணவிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்கள், தொழில் முனைவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இப் போட்டியில் பங்கேற்கலாம், என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி