தோளூர்ப்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக்கில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக்கில்  தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற, தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கில், கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் சேர்மன் டாக்டர் பெரியசாமி பேசினார்.

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக்கில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருச்சி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம், கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிஎஸ்கே. பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொழில் முனைவோர் மண்டல கள ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் கலந்துகொண்டு பேசினார்.

கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை, கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ராஜமணிகண்டன் ஆகியோர் மாணவர்கள் டிப்ளமோ படித்தவுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோராவது குறித்தும், அதற்கு தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கடன் பெறுவது குறித்தும் பேசினார்கள். முடிவில் கொங்குநாடு பாலிடெக்னிக் துணை முதல்வர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags

Next Story