நாமக்கல்லில் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல்லில் டிப்ளமோ என்ஜீனியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நடராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் தனுசுராம் (19). டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்தார். தனுசுராம் தனது உறவினர் ஒருவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2 பேர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து, தனுசுராமிற்கு வேலை கிடைத்த பிறகு, 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் தனசுராம் விரக்தியடைந்தததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்ற திடீரென்று தனுசுராம் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அங்கு, தனுசுராம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நாமக்கல் போலீசார் தனுசுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!