மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 2 ஆண்டாக நீடித்த எல்லைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

மோகனூர் டவுன் பஞ்சாயத்தில்  2 ஆண்டாக நீடித்த எல்லைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
X

பைல் படம்

மணியங்காளிப்பட்டி புதுக்காலனி மோகனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்டது என்பது சர்வே மூலம் அளவீடு செய்து அறிவிக்கப்பட்டது.

மோகனூர் அருகில் உள்ள மணியங்காளிப்பட்டி புதுக்காலனி மோகனூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்டது என்பது சர்வே மூலம் அளவீடு செய்து அறிவிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

மோகனூர் அருகில் மணியங்காளிப்பட்டி புதுக்காலனி உள்ளது.உள்ளாட்சித் தேர்தலில், இப்பகுதி வாக்காளர்கள் பேட்டப்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிக்காக ஓட்டுப்போட்டனர். ஆனால் சமீபத்தில் இப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு மோகனூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் சிலருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இப்பகுதி கிராம பஞ்சாயத்தா அல்லது மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன் இணைந்துள்ளதா என்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வீடு மற்றும் நிலம் சம்மந்தமான ஆவணங்களைப் பெறுவதில் இப்பகுதி மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. அவர்கள் பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் எல்லைப்பிரச்சினை தீரவில்லை.

இதுனால் விரக்தியடைந்த இப்பகுதி பொதுமக்கள், எல்லையை முடிவு செய்து அறிவிக்கக் கோரி, கடந்த 19ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோகனூர் தாசில்தார் தங்கராஜூ மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில், சர்வேயரைக் கொண்டு அளவீடு செய்து எல்லை பிரிக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி, சர்வேயர் கொண்டு கிராம எல்லைகள் அளவீடு செய்யப்பட்டது.

அதன்பிறகு, மணியங்காளிப்பட்டி புதுக்காலனி, மோகனூர் டவுன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டது என வரையறை செய்யப்பட்டது. இதன் மூலம், 2 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Tags

Next Story
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!