முட்டை கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பண்ணையாளர்கள் கோரிக்கை

முட்டை கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பண்ணையாளர்கள் கோரிக்கை
X

பைல் படம் 

என்இசிசி அறிவிக்கும் முட்டை கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, சிறிய கோழிப்பண்ணையாளர்கள் என்இசிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நாமக்கல்,

என்இசிசி அறிவிக்கும் முட்டை கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, சிறிய கோழிப்பண்ணையாளர்கள் என்இசிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

சிறிய கோழிப்பண்ணையாளர்கள், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது;

கோழி முட்டை விலையை நாள்தோறும் என்இசிசி அறிவித்து வருகிறது. இது வெளிப்படையான முறையில் இல்லாததால், முட்டை உற்பத்தி செய்யும் சிறிய பண்ணையாளர்களுக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. என்இசிசி ஒரு விலை அறிவித்தும், முட்டை விற்பனையை£ளர்கள் எங்களிடம் அவரவர் ஒரு விலையை வைத்து கேட்கிறார்கள். இன்றைக்கு முட்டையை விற்பனை செய்தால்தான், நாளைக்கு தீவனம் வாங்க முடியும் என்ற நிலையில்தான் சிறிய பண்ணையாளர்கள் உள்ளோம். சத்துணவு முட்டை டெண்டர் எடுத்தவர்களுக்கு, சத்துணவு முட்டையை விலை குறைத்து வாங்க வேண்டும் என எண்ணம் உள்ளது. முட்டை எக்ஸ்போர்ட் ஆர்டர் எடுத்தவர்களுக்கு, எக்ஸ்போர்ட் முட்டையை விலை குறைத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால், அவரவர்கள் தேவைக்காக பெரிய முட்டையின் விலையை குறைத்து, பின் அதில் இருந்து மைனஸ் அல்லது கட்டிங் என்ற பெயரில் விலையை சரித்து, அவர்களுக்கு தேவையான முட்டைகளை பண்ணையில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இப்படித்தான் முட்டை கொள்முதல் நடந்து கொண்டிருக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என்இசிசி அமைப்பின் நோக்கம் பண்ணையாளர்களை பாதுகாப்பதா, வியாபாரிகளை பாதுகாப்பதா என்பது தெரியவில்லை. எங்கள் கோரிக்கை, என்இசிசி தலைவர்தான் பண்ணை முட்டைகளுக்கான கொள்முதல் விலையை வெளிப்படையாக அறிக்க வேண்டும். பரிந்துரைக்கும் நிலை என அறிவிக்கக் கூடாது. பெரிய முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, அதன் உற்பத்தி செலவிற்கும் கீழே செல்லக்கூடாது. சத்துணவு முட்டை மற்றும் எக்ஸ்போர்ட் முட்டைகளுக்கு தனித்தனியாக கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும். நாமக்கல் மண்டலத்தில், அங்கீகரிக்கப்பட்ட முட்டை கொள்முதல் வியாபாரிகள் யார், யார் என்பது குறித்த விபரங்களை வெளிப்படையாக பண்ணையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story