மோகனூர் அருகே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கம்
மோகனூர் அருகே பேட்டப்பாளையத்தில், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பாளையம் பஞ்சாயத்தில் ரூ. 9,32,000 மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜைக்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.
மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நவலடி, பேரூராட்சி பொறுப்பாளர்கள் குமரவேல், சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வரதராஜன், பேட்டப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் குப்பாயி, துணைத் தலைவர் தனலட்சுமி, பிடிஓக்கள் தேன்மொழி, முனியப்பன், டவுன் பஞ்சாயத்து செயல் அலுலர் (பொ) சுப்பிரமணியன்) உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu