திமுக உட்கட்சி தேர்தல் குறித்து நாளை நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்

திமுக உட்கட்சி தேர்தல் குறித்து நாளை நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்
X

ராஜேஷ்குமார் எம்.பி

நாமக்கல் மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவசரசெயற்குழுக் கூட்டம், நாளை 23ம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் உடையவர் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாவட்டத்தில் கட்சியின் உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் கட்சி அமைப்புத்தேர்தல் தொடர்பான பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி