நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று பாதிப்பு
X
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 பேர். மொத்தம் பாதிக்கப்பட்டோர் 46,956.

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46,956 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 62பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 45,963 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 551 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் உயிரழந்தோர் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare