/* */

வெங்காயத்திற்கு நேரடி கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் கோரிக்கை

வெங்காயம் விலை சரிவில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற, அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வெங்காயத்திற்கு நேரடி கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் கோரிக்கை
X

பைல் படம்.

// படம் உண்டு பைல்மேந்: ஆனியன்.ஜேபிஜி //

பைல் படம்

வெங்காய விலை சரிவில் இருந்து விவசாயிகளைக்

காப்பாற்ற அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள்

* தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல், மார்ச்.28-

வெங்காயம் விலை சரிவில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற, அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொது செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்தபோது, விவசாயிகள் தங்கள் கிணற்றில் உள்ள நீரைப் பயன்படுத்தி வெங்காயம் பயிரிட்டார்கள்.

தற்போது வெங்காயம் விலை அதிரடியா வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.5 முதல் 7 வரை மட்டுமே விவசாய தோட்டங்களில், வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வெங்காயத்தை பயிர் செய்து, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து சாகுபடிசெலவு அனைத்தும் நஷ்டம் ஏற்பட்டு, வெங்காயத்தை அறுவடை செய்து, சுத்தம் செய்து விற்பனை செய்யும் செலவுக்கு கூட கட்டுபடியாகாமல் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

இந்த அவல நிலையை போக்கிட உடனடியாக தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை காப்பாற்றுவதற்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போன்று, வெங்காய கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். உற்பத்திக்கு ஆகும் செலவையும் நுகர்வோரின் வாங்கும் திறனையும் கருத்தில் கொண்டு, அடிப்படை விலை நிர்ணயம் செய்து இரு தரப்பினரும் பாதிக்காத வகையில், கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் வெங்காயம் விற்பனை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வெங்காய சாகுபடியில் மிகவும் திறமை வாய்ந்த விவசாயிகள், வெங்காயத்தை நன்கு உலர்த்தி அதனை பட்டறை முறையில் இருப்பு வைத்து பாதுகாப்பதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அந்தந்த விவசாய அலுவலகங்கள் மூலம் அவர்களை அடையாளம் கண்டு நியமனம் செய்து அவர்கள் மூலமே வெங்காயத்தை கிடங்குகளில் பல மாதங்கள் வரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து 1கிலோ வெங்காயத்தை குறைந்தது 25ரூபாய் முதல் 30 ரூபாய் வரை, அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகள் தொடர்ந்து வெங்காய சாகுபடியினை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக முதல்வரும், துறை சார்ந்த அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் போர் கால நடவடிக்கை எடுத்து வெங்காய விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 28 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!