அஞ்சல்வழியில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல்வழியில் கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம் 

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல்,

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2024&-2025 ஆம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி வகுப்பு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு, வருகிற 16ம் தேதி முதல், கூட்டுறவுத்துறையின் அதிகாரபூர்வ வெப்சைட்டான டிஎன்சியு.ஜிஓவி.டிஎன்.இன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம்வகுப்பு தேர்ச்சிபெற்று, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.5.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. வெப்சைட் மூலம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் அப்லோட் செய்து, விண்ணப்பகட்டணம் ரூ.100-ஐ ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தவேண்டும்.

வருகிற மே 6ம் தேதி மாலை 5.30 மணிவரை வெப்சைட்டில், ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு டிஎன்சியு.ஜிஓவி.டிஎன்.இன் என்ற வெப்சைட் மூலமாகவோ அல்லது நாமக்கல் சேலம் மெயின் ரோட்டில் உள்ள கூட்டுறவு மேலாண்மைநிலையத்தை அனுகியோ தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story