சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் நடைபெற்ற, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் துவக்கி வைத்தார்.
Cyber Crime Awareness Rally
உலகமே கையடக்கத்துக்கு வந்துடுச்சுங்க... ஆமாங்க....உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் தற்போது நீங்கள் ஸ்மார்ட்போனில் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல் உலகில் எந்த நாட்டில் உங்கள் உறவினர்கள் இருந்தாலும் அவர்களோடு நீங்கள் வீடியோ காலில் பேசிக்கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டதால் மனிதன் எங்கு செல்லவும் தற்போது தயக்கமே இல்லை.
இவையெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சி ஆதிக்கம் என்று மார்தட்டிக்கொண்டாலும் இதில் பல பக்க விளைவுகளையும் நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த சோஷியல் மீடியாவை வைத்து பலர் பல வேலைகளைச் செய்ய துவங்கியதால் தற்போது காவல்துறைக்கு இது பெரிய விசாரணையாக இருந்து வருவதால் சைபர் கிரைம் என்ற துறையையே நிறுவி அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது அந்த து றையானது மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் பலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில்,
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணிக்கு, மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முன் துவங்கிய பேரணி, மோகனூர் ரோடு, அண்ணா சிலை, மணிக்கூண்டு, திருச்சி ரோடு, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன் ரோடு வழியாக வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.
பேரணியில், முன்பின் தெரியதாத நபர்களுக்கு, செல்போன் மூலம் ஓ.டி.பி. எண், வங்கி கணக்கு விபரம் கூறக்கூடாது. தெரியாத லிங்க்கை கிளிக் செய்யக் கூடது போன்ற விழிப்புணர்வு பெதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், சந்தேகப்பட்டாலும், பாதிக்கப்பட்டாலும் சைபர் கிரைம் குறித்த புகாருக்கு, 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது. நாமக்கல் டி.எஸ்.பி. தனராசு, பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ராமு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu