தோல் கழலை, பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

தோல் கழலை, பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
X

பைல் படம்.

தோல் கழலை மற்றும் பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தோல் கழலை மற்றும் பெரியம்மை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அடிக்கடி பெய்து வரும் மழை, காற்றின் வேகம், ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவை காரணமாக கால்நடைகளை தாக்கும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. இத்தகைய சூழலில் தோல் கழலை மற்றும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை கடித்த கொசு மற்ற மாடுகளை கடிக்கும் போது நோய் எளிதாக பரவும். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு 2, 3 நாட்களுக்கு லேசான காய்ச்சல், அதன் பின் தோலுக்கு அடியில் சிறிய கழலை போன்ற கட்டிகளும் காணப்படும்.

மேலும், பாதிக்கப்பட்ட மாடுகளில் கட்டிகள், வாய், மூச்சுக்குழல், உணவுக்குழலில் நெரிக்கட்டுதல், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினைபிடிக்காமை, கரு சிதைவு போன்ற அறிகுறிகள் தென்படும். சில நேரங்களில் கால்நடைகள் இறக்க நேரிடும். பால் கறக்கும் மாடுகளில் பால் உற்பத்தி பல வாரங்களுக்கு குறைந்து காணப்படும். இதனை தவிர்க்க கொசு, கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகளின் எண்ணிக்கையை அதிகமாகமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாடுகளை நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒட்டிச் செல்லக்கூடாது. புதிதாக சந்தையிலிருந்து மாடுகள் வாங்கும்போது, நோயின் அறிகுறி உள்ளதா என்று நன்கு கவனித்து வாங்க வேண்டும். வாங்கிய பின்பு குறிப்பிட்ட காலத்திற்கு மாடுகளை தனிமைப்படுத்தி பின்பு மற்ற மாடுகளுடன் சேர்க்க வேண்டும். நோய் பாதிப்புள்ள மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். மாடுகள் கட்டும் இடங்கள், பயன்படுத்தும் வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!