கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர் ஸ்ரேயா சிங்

கோடை மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர் ஸ்ரேயா சிங்
X

பைல் படம்.

கோடை மழையால் ஏற்பட்ட விவசாய பயிர்கள் சேதம் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக, காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் சாகுபடி செய்து தோட்டக்கலை பயிர்களான வாழை, மா, பப்பாளி போன்ற பழ மரங்கள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சேத விபரம் குறித்த தகவல்களை மாவட்ட அளவில், தோட்டக்கலைத்துறையின், 96296 62329 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டும் விபரங்ளை தெரிவிக்கலாம். அதன் தொடர்பு எண்கள் விபரம்: எலச்சிப்பாளையம், 86609 59576, எருமப்பட்டி, 94432 15153, கொல்லிமலை, 94432 15153, ராசிபுரம், 94439 43559, நாமகிரிப்பேட்டை, 83446 71576, வெண்ணந்து?ர், 94432 88958, சேந்தமங்கலம், 93455 25000, புதுச்சத்திரம், 95977 45032. நாமக்கல், 87607 51370, பரமத்தி, 97900 09161, கபிலர்மலை, 99768 11991, மோகனு?ர், 94430 25428, திருச்செங்கோடு, 86609 59576, பள்ளிபாளையம், 90959 90799, மல்லசமுத்திரம், 98655 87071.

கடந்த மே 1, 2ல் ஏற்பட்ட பயிர் சேத விபரம் குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் முடிவில் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!